சூரியக் குடும்பத்திற்கு அப்பால் 6 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

Virgo Planets
வாஷிங்டன்: சூரியக் குடும்பத்திற்கு அப்பால் புதிதாக 6 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலிய டெலஸ்கோப் மற்றும் ஹவாயில் உள்ள கெக் டெலஸ்கோப் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் இந்த 6 கிரகங்களையும் கண்டறிந்துள்ளனர்.

இவற்றில் 3 கிரகங்கள் 61 விர்ஜினிஸ் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த விர்ஜினிஸ் நட்சத்திரம் சூரியனைப் போல உள்ளது. விர்ஜினிஸ் நட்சத்திரம் பூமியிலிரு்நது 27.8 ஒளியாண்டுகள் தொலைவில்உள்ளன.

3 கிரகங்களில் சிறியது பூமியின் எடையை விட 5.3 மடங்கு அதிகம் உள்ளது. பெரியது 24.9 மடங்கு அதிக எடையுடன் உள்ளது.

இதேபோல பூமியிலிருந்து 84 ஒளியாண்டு தொலைவில் சூரியனைப் போன்ற இன்னொரு ஒரு நட்சத்திரத்தையும் இதே குழு கண்டுபிடித்துள்ளது. இதற்கு 23 லிப்ரே என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த நட்சத்திரத்தின் அருகே ஜூபிடரைப் போன்ற தோற்றத்தி்ல் ஒரு கிரகம் உள்ளது. ஜூபிடர் சூரியனை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இந்த புதிய கிரகம் 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.

இதுதவிர எச்டி 1461 என்ற இன்னொரு சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி பூமியைப் போன்ற ஒரு சூப்பர் எர்த் கிரகம் காணப்படுகிறது. இந்த நட்சத்திரம் 76 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

இந்த கிரகம், பூமியின் எடையை விட 7.5 மடங்கு அதிகம் உள்ளது. இந்த கிரகம் எத்தகைய தன்மை கொண்டது, ராட்சத பாறைகளுடன் கூடியதா என்பது தெரியவில்லை. மேலும் யுரேனஸ், நெப்ட்யூனில் உள்ளது போல வாயுக்களும், பனிக் கட்டிகளும் நிரம்பியதா என்பதும் தெரியவில்லை.

இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் கிறிஸ் டன்னி கூறுகையில், இவை மிகவும் வியப்பாக உள்ளன.

நமது சூரியக் குடும்பத்தில் இடம் பெற்றுள்ள நெப்டியூன் கிரகம், பூமியை விட 17 மடங்கு அதிக எடை கொண்டதாகும்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களைப் பார்க்கும்போது, சூரியனைப் போன்ற நட்சத்திரங்கள் நிறைய இருக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும் சிறிய கிரகங்களில் கூட மனிதர்கள் வாழ தேவையான தகுதிகள் இருக்கக் கூடும் என்ற புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆய்வு என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+