பாஜக தலைவராக நிதின் கட்காரி நியமனம்

Subscribe to Oneindia Tamil

Nitin Gadkari family
டெல்லி: பாஜக தேசியத் தலைவராக நிதின் கட்காரி இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்றே அவர் பதவியேற்றுக் கொள்கிறார்.

மகாராஷ்டிர மாநில பாஜக தலைவராக உள்ள கட்காரி இன்று காலை நாக்பூரில் இருந்து டெல்லி கிளம்பினார். ஆனால், வானிலை மோசமாக இருந்ததால் அவரது விமானம் தாமதமானது.

பிற்பகலில் டெல்லி வந்த அவர் அத்வானி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்தித்துப் பேசிய பின் அசோகா சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் புதிய தலைவராக அதிகாரப்பூவ்ரமாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து வாஜ்பாயை சந்தித்து ஆசி பெறும் அவர் இன்றே பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

52 வயதாகும் நிதின் கட்காரி எம்.காம் படித்தவர். மகாராஷ்டிர மாநில பொதுப்பணித்துறை அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவிகளை வகித்தவர்.

பிராமண சமூகததைச் சேர்ந்த இவர் தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் ஆவார். இவருக்கு காஞ்சன் என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+