For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.592 கோடிக்கு என்டிடிவி இமேஜினை வாங்கிய டைம் வார்னர்!

By Staff
Google Oneindia Tamil News

NDTV Imagine
மும்பை: ரூபர்ட் முர்டோக்கின் டைம் வார்னர் குழுமம், என்டிடிவியின் பொழுதுபோக்குச் சேனலான என்டிடிவி இமேஜின்-ஐ வாங்குகிறது.

126.5 மில்லியன் டாலருக்கு (ரூ.592 கோடி)இந்த பேரம் படிந்துள்ளதாக டைம் வார்னர் அறிவித்துள்ளது.

இதற்கான ஒப்பந்தம் சில தினங்களுக்கு முன் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, என்டிடிவி இமேஜினின் 92 சதவிகித பங்குகளை டைம் வார்னர் நிறுவனம் வாங்கும்.

பங்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை தவிர, கூடுதலாக 50 மில்லியன் டாலரையும் ஆரம்ப முதலீடாகச் செலுத்துகிறது டைம் வார்னரின் ஆசியப் பிரிவான டர்னர் ஆசியா பசிபிக் வென்சர்ஸ்.

இந்த இணைப்பின் மூலம், என்டிடிவி நெட்வொர்க், கடன் இல்லாத, உபரி நிதி வைத்திருக்கும் நிறுவனமாக மாறுகிறது. தற்போது என்டிடிவிக்கு ரூ 86 கோடி கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

என்டிடிவியின் இந்த சேனலை இவ்வளவு விலை கொடுத்து டைம் வார்னர் வாங்கக் காரணம் என்ன?

"இந்தியா தங்களின் முக்கிய சந்தை. குறிப்பாக பொழுதுபோக்குத் துறையில் இந்தியாவில்தான் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதை சரியாகப் பயன்படுத்தும் முயற்சியே இது" என்று டைம் வார்னர் விளக்கம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X