ஜமைக்காவில் யுஎஸ் விமானம் விபத்து-90 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 பயணிகள் விமானம், 145 பயணிகளுடன் மியாமியில் இருந்து ஜமாய்க்கா வந்தது.
கிங்ஸ்டன் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்திற்கு அருகில் இருந்த தரைப்பகுதியில் மோதி நின்றது.
இதில் விமானம் நடுபகுதியில் பிளவு ஏற்பட்டு இரண்டாக உடைந்தது. அதிருஷ்டவசமாக விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உயிர் தப்பினர்.
எனினும் இவ்விபத்தால் 90 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவி்த்தனர்.
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications