டெல்லியில் நடமாடும் ரயில் டிக்கெட் கவுன்டர் அறிமுகம்
டெல்லி: நடமாடும் டிக்கெட் முன்பதிவு மையங்களை முதல்கட்டமாக டெல்லியில் அறிமுகப்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் மார்கெட் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற பகுதிகளில் இதுபோன்ற 50 நடமாடும் மையங்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவும், பயணிகளுக்கு டிக்கெட்டை உடனுக்குடன் வழங்கவும் தேவையான செயற்கைகோள் இணைப்பு முதல் அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த வேன்களில் போதுமான பணியாளர்களும் அமர்த்தப்படுவர்.
ஏற்கனவே இத்திட்டம் குறித்து ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி, ரிசர்வ் மற்றும் அன்ரிசர்வ் டிக்கெட்டுகள் அனைத்தையும் இதிலிருந்து பெறலாம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக, போக்குவரத்து வசதி குறைவாக உள்ள மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள பயணிகளின் வசதிக்காக இந்த திட்டம் தீட்டப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முதல்கட்டமாக டெல்லியில் அறிமுகப்படுத்திய பின்னர் படிப்படியாக பல்வேறு இடங்களிலும் இத்திட்டம் முறைப்படி செயல்படுத்தப்படு்ம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications