கராத்தே சம்மேளனம்-கராத்தே தியாகராஜன் டிஸ்மிஸ்

டிசம்பர் 28ம் தேதி இந்தக் கூட்டம் நடந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் சிங் தலைவராகவுகம், பி.ஆர்.ரமேஷ் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று சம்மேளனச் செய்திக்குறிப்பு கூறுகிறது.
பெருமளவில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கராத்தே தியாகராஜன், முன்னாள் பொருளாளர் பரத் சர்மா ஆகியோர் மீது கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் இதுதொடர்பாக இருவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் பங்குக்கு 2 பேரை தூக்கிய கராத்தே..
இதற்கிடையே, பி.ஆர்.ரமேஷ் மற்றம் கணேஷ் ஆகியோரை சம்மேளனத்தை விட்டு நீக்கியிருப்பதாக கராத்தே தியாகராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அகில இந்திய கராத்தே சம்மேளனம் சார்பில் தேசிய ஜூனியர் மற்றும் கேடட் பிரிவு கராத்தே சாம்பியன் போட்டி ஈரோட்டில் கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இந்த சமயத்தில் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட மாட்டாது என்று டிசம்பர் 13ம் தேதி அனைத்து மாநில உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதோடு போட்டியின் இடையில் 28ம் தேதியும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 31ம் தேதி பி.ஆர்.ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் பொதுக் குழு கூட்டத்தில் என்னை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து உறுப்பினர்களுக்கு இ மெயில் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறார்.
கார்த்தி சிதம்பரம்...
உண்மையில் அந்த தேதியில் பொதுக்குழு கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. மேலும் முன்னாள் எம்.பி.சஞ்சய்சிங் தலைமையிலான புதிய அமைப்புக்கு கார்த்தி ப.சிதம்பரம் தலைமை புரவலராக இருப்பதாக அவரது பெயரை தவறாக பயன்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எனது தலைமையிலான அகில இந்திய கராத்தே சம்மேளனத்துக்கு தான் கார்த்தி ப.சிதம்பரம் தலைமை புரவலராக உள்ளார்.
கராத்தே சம்மேளனத்துக்கு எதிராக பொதுச் செயலாளர் பி.ஆர்.ரமேஷ், துணைத் தலைவர் கணேஷ் ஆகியோர் செயல்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து எழும்பூரில் கடந்த 31ம் தேதி நடந்த சிறப்பு நிர்வாக குழு கூட்டத்தில் இருவரையும் அந்த பொறுப்பில் இருந்து சஸ்பெண்டு செய்வது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications