மாருதி சுசுகி கார்களின் விலை திடீர் உயர்வு
Subscribe to Oneindia Tamil

சனிக்கிழமை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அனைத்துக் கார்களின் விலைகளையும் ரூ. 10,000 வரை அது உயர்த்தியுள்ளது.
இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு காரணாக இந்த விலை உயர்வை அது அறிவித்துள்ளது.
ரிட்ஸ் விடிஐ காரின் விலை 0.12 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக டிசையர் எல்எக்ஸ்ஐ மாடல்களின் கார்களுக்கு 1.9 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாருதி கார்களின் விலை சில ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 10,000 வரை விலை உயர்ந்துள்ளது.
மேலும் தனது ஸ்விப்ட் ரக கார்களின் என்ஜின்களையும் மேம்படுத்தியுள்ளதாக மாருதி அறிவித்துள்ளது. அதன் விலை, சமீபத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஈகோ மற்றும் ஜிப்சி மாடல்களின் விலையை உயர்த்தவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications