5 மத்திய அமைச்சர்களின் ராஜ்யசபா எம்.பி. பதவி முடிகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 5 மத்திய அமைச்சர்கள் உள்பட 65 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
மத்திய அமைச்சர்களான ஏ.கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, எம்.எஸ்.கில், அனந்த் சர்மா ஆகியோர் தவிர, பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர்களான பி.கே.ஹரிபிரசாத், ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரின் பதவிக்கலாம் முடிவடைகிறது.
சமாஜ்வாடிக் கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்.பியாகவுள்ள ஜெயா பச்சன் உள்பட 11 ராஜ்யசபா எம்.பிக்கள் உ.பியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.
அதேபோல அருண் ஷோரியின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications