புவிவெப்ப மாற்றத்திற்கு அமெரிக்காவே காரணம்: பின் லேடன் திடீர் கவலை-எச்சரிக்கை!

அமெரிக்காதான் புவிவெப்ப மாற்றத்திற்கும், உலகில் வெப்ப நிலை அதிகரித்துள்ளதற்கும் காரணம் என்று பாய்ந்துள்ளார் லேடன்.
இதுகுறித்து அந்த வீடியோசெய்தியில் லேடன் கூறுகையில், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கும், புவிவெப்ப அதிகரிப்புக்கும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும்தான் காரணம்.
மூன்றாவது உளக நாடுகளில் அதிகரித்து வரும் வெள்ளம், பட்டினி, பஞ்சம், காடுகள் அழிவது ஆகிய அனைத்துக்கும் அமெரிக்காதான் காரணம்.
புவிவெப்ப மாற்றம் குறித்து விவாதிப்பது மிகவும் அவசியமானது. ஆடம்பர நாடுகளின் வசதிக்கேற்ப இதைப் பேச முடியாது.
அமெரிக்க பொருளாதாரத்தின் அச்சாணியை முறிக்க வேண்டும். அதற்கு அமெரிக்க டாலரையும், அமெரிக்க பொருட்களையும் உலக மக்கள் புறக்கணித்து ஒதுக்க வேண்டும்.
இதனால் ஆப்கானிஸ்தான், ஈராக்கில் ஆக்கிரமித்து போர் நடத்தி வரும் அமெரிக்க ராணுவம் பெரும் பாதிப்பை சந்திக்கும். இதன் மூலம் அமெரிக்காவின் அடிமைத் தளையிலிருந்து இந்த நாடுகளை மீட்க முடியும் என்று கூறியுள்ளார் லேடன்.
அல்ஜசீரா டிவி இந்த செய்தியை ஒளிபரப்பியுள்ளது. வழக்கம் போல இது உண்மையிலேயே பின் லேடன்தானா, அல்லது போலியா என்ற வாதமும் பின்னாலேயே கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications