பி்ப். 24ல் ரயில்வே, 26ல் பொது பட்ஜெட் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 22ம் தேதி தொடங்குகிறது. 24ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 26ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
முதல் நாளன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்துவார்.
இதையடுத்து 24ம் தேதியன்று 2010-11ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தாக்கல் செய்வார்.
26ம் தேதியன்று 2010-11ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்வார்.
மார்ச் 16ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். பின்னர் ஏப்ரல் 12ம் தேதி மீண்டும் கூடும் என லோக்சபா செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபா கூட்டத் தொடர் பிப்ரவரி 22ம் தேதி தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெறும்.












Click it and Unblock the Notifications