மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் புதுச்சேரி பயணம் திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று புதுச்சேரி வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் பல்வேறு மக்கள் நலப் பணி திட்டங்கள் குறித்து முதல்வர் வைத்தியலிங்கம் மற்றும் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த சிதம்பரம் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், நேற்று எதிர்பாராத விதமாக புனேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் அமைச்சரின் புதுச்சேரி பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த பயணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications