அடுத்த நிதியாண்டில் 8.5% வளர்ச்சி-பிரணாப் முகர்ஜி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவிகிதமாக இருக்கும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மீட்சி காரணமாக நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தை எட்டும் என்றும், இது அடுத்த ஆண்டும் தொடரும் என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறினார்.
ஆனால் பொருளாதார வளர்ச்சி குறித்து மூன்றுவிதமான கணிப்புகள் வந்துள்ளன. மத்திய நிதி அமைச்சகம் 7.8 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்றும், மத்திய ரிசர்வ் வங்கி 7.5 சதவிகிதம் என்றும் மத்திய புள்ளிவிவர மையம் 7.2 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்றும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று கணிப்புகளில் ரிசர்வ் வங்கியின் கணிப்பை மட்டும் இப்போது ஹைலைட் செய்யத் துவங்கியுள்ளார் பிரணாப் முகர்ஜி.












Click it and Unblock the Notifications