திடீரென குறைந்த காய்கறி விலை!

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.5 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.12 வரை அதிகமாக விற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் வரை தக்காளி கிலோ ரூ. 30 வரை விற்பனையானது. ஆனால் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் காய்கறி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான லாரிகளில் காய்கறிகள் கோயம்பேட்டுக்கு வந்தவண்ணம் உள்ளது. வழக்கத்தை விட கூடுதலாக 100 லாரிகளில் காய்கறிகள் வந்து குவிகிறதாம். இதனால் காய்கறி விலை அதிக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.4 முதல் ரூ. 5 வரை விற்கப்படுகிறது. கத்தரிக்காய் ரூ.12க்கும், வெண்டைக்காய் ரூ.14க்கும் விற்பனையாகிறது.
வெங்காயம் கிலோ ரூ.15 ஆகக் குறைந்துள்ளது. ஆனால் வெளி மார்க்கெட்டில் இன்னும் ரூ.24க்கு விற்கிறார்கள் வியாபாரிகள்.
கேரட், பீட்ருட், நூக்கல் போன்ற மலைக் காய்கறிகள் விலை கிலோ ரூ.10 முதல் ரூ.14க்குள் விற்கப்படுகிறது கோயம்பேட்டில். ஆனால் சில்லறைக் கடைகளில் இன்னும் ரூ.20க்கு விற்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications