காமன்வெல்த் துப்பாக்கி சுடும்போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா முதல் தங்கத்தை வென்றது.
காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டி டெல்லியில் உள்ள டாக்டர் கார்னிசிங் ஷூட்டிங் ரேஞ்சில் நடந்துவருகிறது.
இதில் பத்து மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் ககன் நரங், ரகுநாத் ஜோடி கலந்து கொண்டனர்.
இவர்கள் மொத்தம் 1193 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் பெற்றனர். ககன் நரங் 599 புள்ளிகளும், ரகுநாத் 594 புள்ளிகளும் பெற்று இருந்தனர்.
இவர்கள் இங்கிலாந்து வீரர்களை தோற்கடித்தனர். இங்கிலாந்து வீரர்கள் 8 புள்ளிகள் குறைவாக பெற்று வெள்ளி பதக்கம் பெற்றனர்.
இதன் மூலம் காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்து உள்ளது.












Click it and Unblock the Notifications