சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது எண்டேவர் விண்கலம்

சர்வதேச நாடுகள் உதவியுடன் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நாசா அமைத்து வருகிறது. கடந்த 1998 முதல் இந்த விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விண்வெளியில் நடந்து வருகின்றன.
தற்போது அட்லாண்டிக் கடலுக்கு மேலே, ஆப்பிரிக்காவின் மேற்கு சஹாரா பகுதிக்கு சற்று மேற்கே 200 மைல் உயரத்தில் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையம் தற்போது 98 சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
கடந்த வாரம் பூமியில் இருந்து நிலையத்துக்கு தேவையான ட்ரான்குலி்ட்டி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை விண்வெளி நிலையத்துக்கு கொண்டு போய் சேர்த்த எண்டேவர் விண்கலம், தனது வேலை முடிந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு அங்கிருந்து நோக்கிப் புறப்பட்டது.
நாளை இரவு ஃபுளோரிடாவில் எண்டேவர் வந்திறங்கும்.
இதன்பின்னர் இன்னும் நான்கு முறை விண்வெளி நிலையத்துக்கு உபகரணங்கள் கொண்டு செல்லப்படும். இதைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் முதல் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை தொடங்குவார்கள்.












Click it and Unblock the Notifications