நெதர்லாந்து முழுவதும் விரைவில் 1 Gbps வேக பிராட்பேண்ட்!
Subscribe to Oneindia Tamil

நாலரை கோடிக்கும் மேல் பிராட்பேண்ட் இணைப்புகள் கொண்ட இந்தியாவில், நொடிக்கு 256 கேபி என்ற அளவை அதிவேகம் என நாம் குறிப்பிட்டுக் கொண்டும், பயன்படுத்தியும் வருகிறோம்.
ஆனால், கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள கூகுள் பைபர் திட்டத்தின் மூலம் விரைவில் 1 Gbps வேக பிராட்பேண்ட் சாத்தியமாகவுள்ளது.
முதல் கட்டமாக நெதர்லாந்தின் ரெஜிஃபைபர் நிறுவனம் கேபிஎன் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
இதன் மூலம் தனது 3 லட்சம் வாடிக்கையாளர்கள் அத்தனை பேருக்கும், எஃப்டிடிஎச் மூலம் ஒரு ஜிபி வேகத்தில் பிராண்ட்பேண்ட் சேவை வழங்க ரெஜிஃபைபர் திட்டமிட்டுள்ளது. முதல் முறையாக ஸீவோர்ல்ட் நகரம் இந்த சேவையை பெற உள்ளது.












Click it and Unblock the Notifications