ஜாகுவார் தங்கத்துக்கு திருமாவளவன் நேரில் ஆதரவு

இன்று ஜாகுவார் தங்கத்தின் வீட்டிற்கு நேரில் சென்று திருமாவளவன் ஆதரவு தெரிவித்தார். மேலும், அவர் நேற்றைய தாக்குதலின் போது காயமுற்ற ஜாகுவாரின் மனைவியிடமும் நலம் விசாரித்தார்.
கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது: திருமா வழங்குகிறார்
இந் நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களின் மூலமாக மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக கருணாநிதிக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
முதல்வரை நேரில் சந்தித்து இதுபற்றி தெரிவித்ததாகவும், விருதை ஏற்க கருணாநிதி சம்மதித்ததாகவும் திருமாவளவன் கூறினார்.
வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெறும் போது கருணாநிதிக்கு விருது வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications