பிறந்த நாள் கட்அவுட், விளம்பரம் கண்டிப்பாக கூடாது: மு.க.ஸ்டாலின்

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எனது பிறந்த நாளான மார்ச் 1ம் தேதியன்று, எனக்கு வாழ்த்து சொல்லும் வகையில் இளைஞரணியினரும், கழகத்தினரும் பேனர்கள், கட் அவுட்கள் எதுவும் கண்டிப்பாக வைக்கக்கூடாது.
அப்படி செய்வது எனக்கு எந்த வகையிலும் நன்மை செய்வதாகாது. தற்போது யாரேனும் இத்தகைய ஏற்பாடுகளை செய்திருந்தால் அவற்றை உடனடியாக அகற்றிட வேண்டும்.
இதுபோல பத்திரிகைகளில் விளம்பரங்களும் தரக்கூடாது. சுவரொட்டிகள் ஒட்டுவதும் அறவே தவிர்க்கப்பட வேண்டும். பிறந்தநாள் விழா என்ற பெயரில் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.
கழகத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் சமூக நலப்பணிகளை மேற்கொள்வோர் எவ்வித ஆடம்பரமுமின்றி, ஆக்கப்பூர்வமான முறையில் அதனை நடத்திட வேண்டுகிறேன். இது என் கண்டிப்பான வேண்டுகோள்' என கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இதுபோன்ற உத்தரவை கட்சியினருக்குப் பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications