அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வரக் கூடும்
Subscribe to Oneindia Tamil

தெற்காசிய, மத்திய ஆசியாவுக்கான உதவி வெளியுறவு அமைச்சரான பிளேக் இதுகுறித்துக் கூறுகையில், ஒபாமா நிர்வாகத்தின் திட்டத்தில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. மேலும், இந்தியப் பயணமும் கூட முன்னுரிமை திட்டத்தில் உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது, இந்தியாவுக்கு வருமாறு அதிபருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும், இந்தியாவின் முக்கியத்துவத்தை ஒபாமா உணர்ந்துள்ளார். நிச்சயம் இந்தியாவுக்கு வருவதாகவும் பிரதமருக்கு அவர் உறுதியளித்துள்ளார். எனவே இந்த ஆண்டு இறுதியில் அதிபர் ஒபாமா இந்தியா செல்லும் வாய்ப்பு உள்ளது என்றார் பிளேக்.
இருப்பினும் எந்தத் தேதியில் ஒபாமா இந்தியா செல்வார் என்பதை பிளேக் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications