ஆஸ்திரேலிய மருத்துவமனையில் யுவராஜ் சிங்குக்கு சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
மும்பை: மணிக்கட்டில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவிற்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
டாக்காவில் அண்மையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது இடதுகை மணிக்கட்டில் யுவராஜ் சிங்கிற்கு காயம் ஏற்பட்டது.
இதனால் மெல்போர்னில் உள்ள மருத்துவ நிபுணர்களை சந்தித்து தகுந்த ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு யுவராஜ் சிங்கை பிசிசிஐ நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக ஆஸ்திரேலியா புறப்பட்டுவிட்டதாக தனது இணையதளத்தில் யுவராஜ் சிங் ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications