சுங்க வரி அதிகரிப்பு-சிகரெட், டிவி, ஃபிரிட்ஜ் விலை உயரும்
டெல்லி: நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி சிகரெட், பீடி, சிமென்ட், ஏசி, டிவி, இரும்பு, வெள்ளி, விலை மதிப்பற்ற கற்கள், மதுபானங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயரும்.
காம்பாக்ட் டிஸ்க் எனப்படும் சிடிக்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிடிக்கள் விலை குறையும்.
சேவை வரி 10 சதவீதம் என்பதில் மாற்றம் செய்யப்படவில்லை. அது அப்படியே தொடருகிறது.
ஆன்லைன் செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு கட்டாய ஆடிட் முறை அமலாக்கப்படுகிறது.
விவசாய விதைகள் மீதான வரி முழுமையாக விலக்கு
அளிக்கப்படும்.
மோனோ ரயில்களுக்கு இறக்குமதி திட்ட அந்தஸ்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை காரணமாக வைத்து சிகரெட் விலையை 3 வாரங்களுக்கு முன்பே கடைக்காரர்கள் உயர்த்திவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications