சீவேர்ல்ட் பயிற்சியாளரை கொன்ற திமிங்கிலம்!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பிரபல ஒர்லாண்டோ சீவேர்ல்டு மரைன் பார்க்கில் தமிங்கிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் 'திலிகும்' (தோழன்) என்ற பெயரில் ஒரு திமிங்கிலம் உள்ளது. இந்த திமிங்கிலம் ஏற்கனவே இரண்டு பேரை கொன்றுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் புதன்கிழமை 40 வயதான டான் பிரான்ஷூ என்ற பெண் பயிற்சியாளரை இந்த திமிங்கிலம் அடித்துக் கொன்றுள்ளது.
நீர்த்தொட்டியின் அருகில் நின்றிருந்த பயிற்சியாளரின் கைகளை திடீரென கவ்வி, தண்ணீருக்குள் இழுத்ததை அடுத்து டான் பிரான்ஷூ உயிரிழந்துவிட்டதாக அருகில் இருந்தவர்கள் கூறினர்.
இச்சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications