சென்னை ஹைகோர்ட்-கருணாநிதி வருகைக்கு வக்கீல்கள் எதிர்ப்பு

இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவதற்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கி அலுவலகத்துக்கு எதிரே உள்ள மைதானத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வரும் 25ம் தேதி காலை திறப்பு விழா நடக்கவுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதியின் வருகைக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு:
சிலை திறப்பு விழாவில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும்.
கடந்த 19.2.2009 அன்று நடந்த வக்கீல்கள்-போலீசார் மோதலுக்கு காரணமாக இருந்த போலீஸ் துறைக்கு பொறுப்பேற்று இருக்கும் முதல்வர் கருணாநிதிக்கு இந்த விழாவில் வரவேற்பு அளிக்கக்கூடாது.
இந்த மோதலுக்கு காரணமான 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முதல்வர் கருணாநிதி கீழ்படியவில்லை. எனவே, அவர் வருவதாக இருந்தால் 200க்கும் மேற்பட்ட வக்கீல்களும், மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் இணைந்து கறுப்பு கொடி காட்டுவோம்.
மேலும், நீதிபதிகளின் உத்தரவை பின்பற்ற தவறிய முதல்வர் கருணாநிதி இருக்கும் மேடையில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாரும் அமரக்கூடாது.
இவ்வாறு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் வழக்கறிஞர் ஏ.ஆர்.எம்பெருமாள் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் கருணாநிதியை இந்த விழாவுக்கு நீதிபதிகள் அழைக்க கூடாது. அப்படி அழைத்தால் 23ம் தேதியில் இருந்து நான் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications