முஸ்லீம் தொழிலதிபர்கள் மாநாடு நடத்துகிறார் பாரக் ஒபாமா
வாஷிங்டன்: முஸ்லீம் நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான மேலும் வலுப்படுத்துவேன் என்று அதிபராக பதவியேற்றபோது அளித்த உறுதிமொழிக்கேற்ப நடவடிக்கையில் இறங்கியுள்ள அதிபர் ஒபாமா, முஸ்லீம் சிறுதொழிலதிபர்கள் மாநாட்டை அடுத்த வாரம் அமெரிக்காவில் நடத்துகிறார்.
50 நாடுகளைச் சேர்ந்த சிறு தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், முதலீட்டளாளர்கள் 250க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர். 2 நாள் மாநாடாக இது வாஷிங்டனில் நடைபெறுகிறது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறுகையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய அம்சமாக உலகளாவிய சிறு தொழில் முதலீடுகளை வலுப்படுத்துவது திகழ்கிறது. இதன் மூலம் முஸ்லீம் நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மேம்படும் என்றார்.
கடந்த ஜூன் மாதம் கெய்ரோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஒபாமா பேசுகையில், அமெரிக்காவுக்கும், முஸ்லீம் நாடுகளுக்கும் இடையிலான கெளரவத்தையும், மரியாதையையும் அதிகரிக்க ஆர்வமாக உள்ளேன். இரு தரப்புக்கும் இடையிலான கூட்டுப் பங்களிப்புகள் அதிகரிக்க வேண்டும் என்றார்.
தற்போது நடைபெறவுள்ள சிறுதொழிலதிபர்கள் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர் லாரி சம்மர்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கினறனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications