இந்து முன்னணி மாநாட்டிற்கு செல்ல பஸ்களுக்கு பெர்மிட் மறுப்பு: ராம. கோபாலன் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கரூரில் இன்று நடைபெறும் மாநாட்டுக்கு பஸ்களை அனுமதிக்க மறுப்பதாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மீது நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
இது குறித்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கருரில் இன்று நடக்கும் இந்து முன்னணியின் 6-வது மாநில மாநாட்டிற்கு செல்ல பேருந்துகளுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பேருந்துகளுக்கு கரூர் சொல்ல பெர்மிட் வழங்க போக்குவரத்து துறை அதிகார்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
அதிகாரிகளின் இந்த போக்கு சர்வாதிகாரத்தையும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதையும் காட்டுகிறது. இதில் அரசு தலையிட்டு அத்துமீறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக ராம. கோபாலன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications