For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தான்: ஒபாமாவை விமர்சித்த அமெரிக்க ராணுவ தளபதி மாற்றம்

By Chakra
Google Oneindia Tamil News

David Petraeus and Stanley Mcchrystal
வாஷிங்டன்: ஆப்கனிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கான தளபதி (U.S. Central Command) ஜெனரல் ஸ்டான்லி மெக்கிறிஸ்டல் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஜெனரல் டேவிட் பெட்ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் கட்டுரை எழுதிய ஸ்டான்லி, ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அதிபர் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆப்கானிஸ்தானில் தனது தலைமையிலான படைகள் மேற்கொள்ளும் போர் உத்திகளையை அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடென், ஆப்கானிஸ்தானுக்கான சிறப்புத் தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக் ஆகியோர் சந்தேகப்படுவதாகக் கூறியிருநதார்.

இதையடுத்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு ஸ்டான்லிக்கு ஒபாமா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை வெள்ளை மாளிகையில் ஒபாமாவை சந்தித்து விளக்கம் தந்தார் ஸ்டான்லி.

ஆனால், அவர் அளித்த விளக்கத்தில் திருப்தியடையாத ஒபாமா, அவரை ஆப்கான் படைகளுக்கான தளபதி பதவியிலிருந்து நீக்கி ஒபாமா உத்தரவிட்டார்.

இதையடுத்து ஜெனரல் டேவிட் பெட்ரியாஸ் இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் ஸ்டான்லியை இழப்பது வருத்தமளிக்கிறது என்றாலும், நாட்டின் நலன் கருதி இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டதாக அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X