அல்-கோர் மீது மசாஜ் அழகி செக்ஸ் புகார்-ஆதாரம் இல்லை என போலீஸ் தகவல்

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த போலீஸார் முயன்றபோது அவர் அவர்களை சந்திக்க மறுத்து விட்டார்.
அந்தப் பெண்ணுக்கு தற்போது 54 வயதாகிறது. கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி கோர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக அந்தப் பெண் புகார் கூறியிருந்தார்.
போர்ட்லேன்டில் புவிவெப்ப மாற்றம் தொடர்பாக உரை நிகழ்த்துவதற்காக அந்த சமயத்தில் கோர் அங்கு வந்திருந்தார்.
இதுகுறித்து மாகாண அரசு வக்கீல் மைக்கேல் ஷ்ரங்க் கூறுகையில், 2006ம் ஆண்டு பிற்பகுதியில் சம்பந்தப்பட்ட பெண் ஒரு புகார் கொடுத்தார். ஆனால் இதுதொடர்பாக போலீஸார் விசாரிப்பதற்கு அவர் உடன்படவில்லை. போலீஸாருக்குக் கொடுத்திருந்த நேரத்தையும் அவர் ரத்து செய்து விட்டார்.
இருப்பினும் அந்தப் பெண் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் போலீஸாரை அணுகி ஒரு வாககுமூலம் அளித்துள்ளார். அதில், ஹோட்டல் லூசியாவில் கோர் தங்கியிருந்தபோது அவருக்கு மசாஜ் செய்ய தான் சென்றதாகவும்,அப்போது அவர் தன்னிடம் செக்ஸ் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாகவும் கூறியுள்ளார் என்றார்.
இதையடுத்து போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கினர். ஆனால், புகாரை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று போலீஸார் கூறியுள்ளார்.
முன்பு மோனிகாவுடன் செக்ஸ் களியாட்டத்தில் ஈடுபட்ட அதிபர் பில் கிளின்டனிடம் துணை அதிபராக இருந்தவர் அல் கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications