For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறுவன் படுகொலை-இளம் பெண் பூவரசி ஜாமீன் கோரி மனு-அரசுக்கு நோட்டீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: சிறுவன் ஆதித்யாவை ஹாஸ்டலில் வைத்துக் கொலை செய்து உடலை புதுச்சேரிக்குக் கொண்டு சென்று பஸ்சில் விட்டு விட்டு வந்த இளம் பெண் பூவரசி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அதை இன்று விசாரித்த சென்னை செஷன்ஸ் கோர்ட் அரசுக்கு விளக்கம் அளிக்கு்மாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,

சென்னையில் சிறுவன் ஆதித்யாவின் தந்தையுடன் தவறான உறவு கொண்டதாகவும் இதனால் உருவான கருவை அவரது வற்புறுத்தலின் பேரில் பூவரசி அழித்து விட்டதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்வதற்கும் சிறுவனின் தந்தை மறுப்பு தெரிவித்து வந்ததால் கோபம் அடைந்து அந்த சிறுவனை பூவரசி கொலை செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள புகார்களில் உண்மை இல்லை. அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையிலும் உண்மை இல்லை.

சிறுவனின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டதன் பேரில் பூவரசி மீது தவறாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு அவரை பார்ப்பதற்கு வக்கீல் சென்றிருந்த போது அங்கிருந்த சிறை நிர்வாகத்தினர் வக்கீலை தடுத்தனர்.

பூவரசியை சந்திக்க விடாமல் எதையெல்லாமோ சொல்லி காலம் தாழ்த்தினர். பூவரசி தனியாக ஒரு அறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அவரை தற்போது அழைத்து வர முடியாது என்றும் குறிப்பிட்டனர். மேலும் சிறைவாசிகளை பார்ப்பதற்கு வக்கீல் சென்ற நேரம் உகந்ததல்ல என்றும் தெரிவித்து அவரை சந்திக்க அனுமதிக்க மறுத்தனர்.

இது தவிர பூவரசியை இந்த கொலையை ஒப்புக் கொள்வதற்காக உடல் அளவிலும், மனதளவிலும் தயார் செய்து வைத்திருப்பதால் அதை வக்கீல் கெடுத்து விடக்கூடாது என்றும் கூறினர். நீண்ட நேரத்திற்கு பிறகு பூவரசியை வக்கீல் சந்தித்தார்.

கைது செய்யப்பட்ட 21-ந் தேதியிலிருந்து தனி சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பூவரசி கூறினார். பூவரசி எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் அந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே பூவரசி பிடிக்காது என்பதால் சமயம் பார்த்து இந்த கொலையில் பூவரசியை குற்றவாளியாக்கி விட்டனர். அதன் மூலம் தங்கள் பழியை தீர்த்துக் கொண்டனர்.

பூவரசி எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபடவில்லை. ஒரு நியாயமான, நேர்மையான பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளியை முடிவு செய்வதற்கு முன்பாக அந்த சிறுவனின் குடும்பத்தினரின் புகாரில் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் பூவரசியை பற்றி பல்வேறு தவறான கருத்துக்களை போலீஸ் அதிகாரிகள் டி.வி.க்களில் பேட்டியாக கொடுக்கிறார்கள். தொடர்ந்து அவரைப் பற்றி தவறான தகவல்கள் தரப்படுவதன் மூலம் இந்த வழக்கின் விசாரணையை அது பாதிக்கும்.

எனவே அது போன்ற பேட்டிகளை தரக்கூடாது என்று அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற பேட்டிகளை ஒளிபரப்புவதற்கு டி.வி.க்களுக்கும் தடை விதிக்க வேண்டும். மேலும் பூவரசிக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று இந்த மனுவை நீதிபதி தேவதாஸ் இன்று விசாரித்தார். அப்போது பூவரசியின் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி வாதிடுகையில், பூவரசி மீது தேவையில்லாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

சிறுவன் ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்வதாக கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு விசாரணையை நாளைக்குத் தள்ளி வைத்தார். இதுகுறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X