For Daily Alerts
வீட்டிற்கு தாமதமாக வந்த மனைவியின் கை உடைப்பு: கணவரின் வெறித்தனம்
திருவனந்தபுரம்: வீட்டிற்கு தாமதமாக வந்த மனைவியின் கையை உடைத்தார் கணவர்.
திருவனந்தபுரம் பேரூர் கடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் கேரள அரசி்ன் ஹெல்ட்ரன் மின்னனு நிறுவனத்தில் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி கிரிஜாதேவி. திருவனந்தபுரம் வஞ்சியூரில் உள்ள முன்சீப் நீதிமன்றத்தில் ஜூனியர் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையி்ல் அலுவலகம் முடிந்து தாமதமாக கிரிஜா தேவி வீட்டிற்கு சென்றுள்ளார்.
மனைவி தாமதமாக வந்தததால் அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மோகன் கிரிஜாதேவியின் கையை அடித்து உடைத்தார்.
இதுகுறித்து கிரிஜாதேவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.