For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாவூத் கும்பல்-நக்ஸல்கள் மூலம் இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி!

By Chakra
Google Oneindia Tamil News

Devaiah and Vinay Kumar
பெங்களூர்: தாவூத் இப்ராகிமின் உதவியுடன் நக்ஸலைட்டுகளை வளைத்து தென் இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தீட்டியுள்ள சதித் திட்டம் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநில போலீசாரும் கர்நாடக மாநில போலீசாரும் இணைந்து இரு மாநிலங்களிலும் நடத்திய விசாரணைகள் மற்றும் ரெய்டுகளில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடகத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் திட்டத்துக்காக தாவுத் மூலமாக ரூ. 25 லட்சம் பணம் ஹவாலா முறையில் கை மாறியுள்ளதும் உறுதியாகியுள்ளது.

மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. தந்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த விசாரணைகள் குறித்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி நிருபர்களி்டம் கூறியதாவது:

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இந்தியாவில் மாவோயிஸ்டுகளை பயன்படுத்தி தீவிரவாத செயலில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக கர்நாடகத்தை சேர்ந்த 2 பேரை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் குமார், குடகு மாவட்டத்தை சேர்ந்த தேவய்யா ஆகியோரை கைது செய்துள்ளோம்.
தாவூத் இப்ராகிம் கூட்டாளியான சோட்டா ஷகீல் குழுவை சேர்ந்த அல்தாப் என்ற ராகேஷ் என்பவன் இந்த இருவரையும் இந்த சதித் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளான். அல்தாப் தென் கனரா மாவட்டத்தைச் சேர்ந்தவன்.

தாவூத் இப்ராகிமின் உத்தரவின் பேரில் சோட்டா ஷகீல் தன்னை இந்த பொறுப்பில் ஈடுபடுத்தி இருப்பதாகவும், வினய், தேவய்யா இருவரும் நக்ஸல் தலைவர்களை தொடர்பு கொண்டு தென் இந்தியாவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற, பண உதவி செய்துள்ளான் அல்தாப்.

மேலும் நக்ஸல் அமைப்பை சேர்ந்தவர்களை துபாயில் வைத்து சந்திக்க ஏற்பாடு செய்யும்படி வினய், தேவய்யாவிடம் அல்தாப் கூறியுள்ளான். அதன்படி இந்த இருவரும் ஆந்திராவில் நக்ஸல் தலைவர்களை சந்தித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த நக்ஸல் தலைவர்கள் ராம்கிரிபால் பாண்டே, சிவகுமார் குந்தா, ஸ்ரீதர் பாஷம் மற்றும் தேவய்யா ஆகியோர் துபாய் செல்வதற்கு தேவையான விசா மற்றும் விமான டிக்கெட்டுகளுக்கு அல்தாப் ஏற்பாடு செய்துள்ளான்.

ஹைதராபாத்தில் இருந்து துபாய் சென்று திரும்ப யுரானஸ் டிராவல்ஸ் அண்டு டூர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து இன்டர்நெட் மூலம் விமான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன.

ஆனால் துபாய் செல்லும் முன்பு வினய், தேவய்யா ஆகியோரை கைது செய்துவிட்டோம். இதன் மூலம் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

தக்க சமயத்தில் வினய் குமார், தேவய்யா ஆகியோர் கைது செய்யப்பட்டதால் தீவிரவாத செயலுக்கு நக்ஸல்களை பயன்படுத்தும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார் பிதரி.

இந்த சதி தொடர்பாக ஆந்திராவிலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த அல்தாப் என்ற ராகேஷ் பெங்களூர் ரெஸிடென்சி சாலையில் டைம்ஸ் பார் என்ற பெயரில் பார் நடத்தி வந்தான். ஆனால், 2006ம் ஆண்டில் ஒரு கடத்தல்-பணம் பறிப்பு வழக்குத் தொடர்பாக கேரள போலீசார் இவனைக் கைது செய்ய முயன்றபோது துபாய்க்கு தப்பியோடிவிட்டான். இப்போதும் அங்கே தான் தலைமறைவாக உள்ளான்.

இந்த பாரில் அடிதடிக்கான ஆளாக வேலை பார்த்தவன் தான் வினய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதாகியுள்ள தேவய்யா, குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு காபி எஸ்டேட் உள்ளது. ஆனாலும் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகளின் நலன் மீது அக்கறை கொண்ட தேவய்யாவுக்கு, பின்னர் நக்ஸல் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவன் மூலமாகவே ஆந்திராவில் நக்ஸல் தலைவர்களை வினய் குமார் தொடர்பு கொண்டுள்ளான்.

நக்ஸல் இயக்கத்துக்கு பணம் தர அல்தாப் தயாராக இருப்பதாக வினய்குமார் கூறியதையடுத்து அவனை அழைத்துச் சென்று நக்ஸல் இயக்கத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளான் தேவய்யா.

மேலும் முதல் கட்டமாக துபாயில் இருந்து ரூ. 25 லட்சம் பணம் தேவய்யாவுக்கு வினய்குமார் மூலம் தரப்பட்டுள்ளது. இதையும் எடுத்துச் சென்று நக்ஸல் தலைவர்களிடம் தந்துவிட்டுத் தான், அடுத்தகட்டமாக துபாயில் சந்திப்புக்கான ஏற்பாடுகளை இவர்கள் செய்துள்ளனர்.

இந் நிலையில் அல்தாபை பிடிக்க இன்டர்போலின் உதவியை நாட மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. முடிவு செய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X