வட கொரியா மீது மீண்டும் பொருளாதாரத் தடை அறிவித்த யுஎஸ்!
வாஷிங்டன்: அணு ஆயுத தயாரிப்பு விவகாரத்தில் தனக்கு அடங்க மறுக்கும் வட கொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது அமெரிக்கா.
வட கொரியாவின் தலைவர் இரண்டாம் கிம் ஜோங், சீனா சென்று திரும்பிய அடுத்த நாளே இந்தத் தடையை அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வட கொரியாவின் அணு ஆயுத உற்பத்தியையும், வர்த்தகத்தையும் முடக்கும் நோக்கிலேயே மீண்டும் இந்தப் பொருளாதாரத் தடையை விதித்துள்ளதாக அமெரிக்கா விளக்கம் தெரிவித்துள்ளது.
"வட கொரியாவின் ரகசிய அணு ஆயுதத் திட்டத்துக்கு உடந்தையாகவுள்ள நிறுவனங்கள், தனி நபர்களின் சொத்துக்களை முடக்கியும், அவர்கள் அமெரிக்காவின் நிதி அமைப்பு முறையினை பயன்படுத்த முடியாத வகையிலும் இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவிதத்தில் வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்காக போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்பாட்டின் மூலம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டின் ரகசிய பிரிவுக்கு எதிராக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள கிரீன் பைன் அசோசியேட் கார்ப்பரேஷன் மற்றும் அதன் தாய் நிறுவனத்தின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கொரியாவின் நிறுவனங்களான தேசோங், கொரியா ஹியூங்ஜின் வர்த்தக நிறுவனம் ஆகியவற்றுக்கும் இந்த புதிய பொருளாதாரத் தடை பொருந்தும். இந்த இரு நிறுவனங்களும் ஈரான், சிரியாவுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன," என்று அமெரிக்கா தனது நீண்ட விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
பேசலாம்...
அதேநேரம், வட கொரியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சு நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனால் உபயோகமான வகையில் பேச்சு இருக்கும் என்றால் மட்டுமே வட கொரியாவுடன் பேச்சு நடத்த விரும்புவதாகவும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு சீனா ஆதரவு தெரிவித்து வருவதால், இந்தத் தடை பற்றி வட கொரியா பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications