அண்ணா பல்கலைக்கழகத்தில் ராகிங்-ராசிபுரம் மாணவி தற்கொலை
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜீனியரிங் படித்து வந்து ராசிபுரத்தைச் சேர்ந்த மாணவி ராகிங் கொடுமை காரணமாக தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினியரிங் படித்து வந்தவர் ஜோதி. இவர் ராசிபுரம் அருகே உள்ள முள்ளிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்.
விடுதியில் தங்கிப் படித்து வந்தார் ஜோதி. இந்த நிலையில் விடுதியில் அவரை மூத்த மாணவிகள் ராகிங் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜோதி ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு வீட்டில்யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸில் ஜோதியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். அதில், ராகிங் கொடுமையால்தான் தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்திலேயே ராகிங் கொடுமை நடந்ததாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.