For Daily Alerts
ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தக் கோரி சூபியா மதானி மனு : இன்று விசாரணை
திருவனந்தபுரம்: பெங்களூர் சிறையில் இருக்கும் மதானியை சந்திப்பதற்காக தன்னுடைய ஜாமீன் நிபந்தனையை தளர்த்த வேண்டும் எனக் கோரி மதானியின் மனைவி சூபியா மதானி கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகப் பேருந்து எரிப்பு வழக்கில் கைதான மதானியின் மனைவி சூபியா தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது, வாரத்தில் 2 நாட்கள் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்நிலையில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் தன்னுடைய ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி சூபியா நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் பெங்களூர் சிறையில் இருக்கும் தனது கணவர் மதானியை சந்திக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.