மாயமான சாலை: கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு-பஞ்சாயத்து தலைவர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வி.கே.புரம்: வி.கே.புரம் அருகே தார்சாலையை காணவி்ல்லை என்று பஞ்சாயத்து தலைவர் புகார் கூறியுள்ளார். மேலும் அதைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு பரிசும் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வி.கே.புரம் அருகே உள்ள அடையகருங்குளம் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அம்பை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அடையகருங்குளம் பஞ்சாயத்தில் கடந்த 2008-ம் ஆண்டு சிறுசேமிப்பு ஊக்க நிதியி்ல் இருந்து ரூ.5 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது என அம்பை ஊராட்சி ஒன்றித்தில் இருந்து வருட வாரிய திட்டப்பணிகள் குறித்த பொது விவர தகவல் ஏட்டில் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள்.

இதன் அடிப்படையில் 583 ஹெக்டேர் பரப்பளவு உள்ள பஞ்சாயத்தில் தேடிப் பார்த்தபோது தார்சாலை பணி நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆகவே ரூ.5 லட்சம் மதிப்பில் அடையகருங்குளம் ஊராட்சியில் போடப்பட்டுள்ள தார்சாலையை என்னாலும், எனது ஊராட்சி பணியாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

ஆகவே பொதுமக்கள் நலன் கருதி அந்த தார்சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடித்து தரக் கோரி விகேபுரம் காவல்துறையின் உதவியை நாட உள்ளோம். இச்சாலையை கண்டுபிடித்து தந்தால் பஞ்சாயத்து சார்பாக தக்க சன்மானம் தரப்படும் என்று கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...