For Daily Alerts
தமிழகத்தில் சிமெண்ட் விலை திடீர் கிடுகிடு உயர்வு

தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து சிமெண்ட் விலை படிப்படியாக உயர்ந்தது. மூடை ஓன்றின் விலை ரூ.250க்கு விற்கப்பட்டது. சிமெண்ட் விலையை கட்டுபடுத்திட வேண்டுமென தமிழகத்தில் உள்ள அரசியல் முக்கிய எதிர்கட்சிகள் அதிமுக, பாமக, கம்யூ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டன குரல் எழுப்பியதுடன் விலையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்நிலையில் மூடை ஓன்றின் விலை 270 ரூபாய்க்கு உயர்ந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கட்டுமான பணியாளர்கள் பாதிக்க கூடிய சூழ்நிலையில் இருப்பதாக அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெளிமாநிலத்தில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யப்படுமென பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை திடீரென மூடைக்கு ரூ.20 வீதம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.