For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 கர்நாடக அமைச்சர்கள் டிஸ்மிஸ்-எதியூரப்பா அதிரடி!: மெஜாரிட்டியை நிரூபிக்க அரசுக்கு ஆளுநர் உத்தரவு

By Chakra
Google Oneindia Tamil News

Yeddiyurappa
பெங்களூர்: தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய 4 அமைச்சர்களை கர்நாடக முதல்வர் எதியூரப்பா டிஸ்மி்ஸ் செய்துள்ளார்.

மேலும் நில மோசடி வழக்கில் தொடர்புடைய அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடுவையும் அவர் ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்த நாள் முதலே கோஷ்டிப் பூசல்களும் ஆரம்பித்துவிட்டன. எதியூரப்பாவுக்கு நெருக்கமான பெண் அமைச்சர் ஷோபாவை நீக்கக் கோரி ரெட்டி சகோதரர்களான அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியதால், ஷோபா நீக்கப்பட்டார்.

இந் நிலையில் கடந்த மாதம் எதியூரப்பா தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியபோது 3 அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிதாக ஷோபா, சோமண்ணா உள்பட 6 பேரை அமைச்சர்களாக்கினார்.

இதையடுத்து எதியூரப்பாவின் எதிர்ப்பாளர்களும், பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களும், பதவி கிடைக்காத எம்.எல்.ஏக்களும் எதியூரப்பாவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

ஷோபாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கலால் துறை அமைச்சர் ரேணுகாச்சார்யா தலைமையிலான இந்த அதிருப்தி கோஷ்டியில் 7 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 7 அமைச்சர்களில் வெங்கட்ராமப்பா, நரேந்திரசாமி, சிவராஜ், சுதாகர் ஆகியோர் சுயேச்சைகளாக வெற்றி பெற்று பாஜக அரசு அமைய ஆதரவு தந்ததற்காக அமைச்சர் பதவியை பெற்றவர்கள் ஆவர்.

இவர்கள் தங்களுக்கு நல்ல வருமான வரும் துறை வேண்டும் என்று கோரி அதிருப்தி கோஷ்டியுடன் கைகோர்த்தனர்.

இவர்கள் முதலில் ஒசூர் சென்று முதல்வருக்கு எதிராக ரகசிய ஆலோசனை நடத்தினர். பின்னர் அதில் 7 அமைச்சர்களும் 8 எம்.எல்.ஏக்களும் சென்னை மகாபலிபுரம் சாலையில் நீலாங்கரை முட்டுக்காட்டில் உள்ள கோகன்ட் குரோவ் என்ற விடுதியில் தங்கி எதியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து அகற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஆர்எஸ்எஸ் உதவியை முதல்வர் எதியூரப்பா நாடினார். பெங்களூர் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்று அந்த அமைப்பின் தலைவர்களுடன் எதியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

அப்போது அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு (இவர் ரெட்டி கோஷ்டியைச் சேர்ந்தவர்), உள்துறை அமைச்சர் அசோக், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோர் அடங்கிய சமரச குழு ஒன்றை சென்னைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்தக் குழு சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அதிருப்தி கோஷ்டியினரை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். விடிய விடிய நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அமைச்சர்கள் அசோக்,பசவராஜ் ஆகியோர் பெங்களூர் திரும்பிவிட்டனர். அமைச்சர் ஸ்ரீராமுலு மட்டும் தொடர்ந்து சமரச முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந் நிலையில் இவர்களுடன் பேசசு நடத்த விரும்பாத சில அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் சேலம் அருகே உள்ள ஏற்காட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந் நிலையில் 7 அதிருப்தி அமைச்சர்களில் சுயேச்சைகளான வெங்கட்ராமப்பா, நரேந்திரசாமி, சிவராஜ், சுதாகர் ஆகியோரை இன்று டிஸ்மிஸ் செய்து எதியூரப்பா உத்தரவிட்டார்.

இதையடுத்து இந்த 4 பேரும் மேலும் சில எம்எல்ஏக்களும் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் கர்நாடக ஆளுநர் பரத்வாஜை சந்தித்து இவர்கள் ஆதரவு வாபஸ் கடிதத்தைத் தருவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி கோஷ்யிலிருந்து விலகி வரும் சில எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக எதியூரப்பா சார்பில் சில மூத்த தலைவர்கள் எம்எல்ஏக்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நில மோடி வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடுவையும் பதவி விலகுமாறு எதியூரப்பா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இவரது மகன் விவசாயி ஒருவரின் நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து அதை பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக அரசுக்கு விற்று ரூ. 1.25 மோசடி செய்து கைதாகியுள்ளார்.

அதே போல தொழில்துறை அமைச்சர் நிராலியின் உதவியாளர், ஒரு திட்டத்துக்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த அமைச்சர் மீது எதியூரப்பா எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்று தெரிகிறது.

இதற்கிடையே, அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை எதியூரப்பா இன்று கூட்டியுள்ளார்.

இந் நிலையில் தொழில் பகுதி மேம்பாட்டு கழகத்துக்கு எதியூரப்பா அரசு நிலம் கையகப்படுத்தியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கர்நாடக கவர்னர் எச்.ஆர்.பரத்வாஜ் நேற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சிறப்பு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே ஆளும் கட்சியில் பாஜகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிருப்தி பாஜக கோஷ்யின் தலைவர் ரேணுகாச்சார்யாவை வளைத்து, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியுமா என்று குமாரசாமி ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களில் 20 பேரின் ஆதரவு தனக்கு உள்ளதாகவும் குமாரசாமி கூறி வருகிறார்.

கர்நாடக சட்டசபையில் கட்சிகள் பலம்:

மொத்த இடங்கள்-224
பாஜக-117
காங்கிரஸ்-73
மதசார்பற்ற ஜனதா தளம்-28
சுயேச்சைகள்-6 (இதில் 4 பேர் பாஜக அரசை ஆதரித்து அமைச்சர்களாகி இப்போது பதவி பறிக்கப்பட்டவர்கள் ஆவர்)

இந் நிலையில் வரும் 12ம் தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு எதியூரப்பாவுக்கு ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X