For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் கைதானது செல்லாது-உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவிட்டது. இதையடுத்து சீமான் விடுதலையாகிறார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கப்படுவதை கண்டித்து, சென்னையில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பரபரப்பான அந்த சூழ்நிலையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க சீமான் வந்தபோது, போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மனு மீதான வழக்கு விசாரணையின்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தினை ஒருவர் மீது பிரயோகிக்க மாநகர ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என, சீமானின் வழக்கறிஞர் வாதிட்டார். சீமானுக்கு எதிராக கூடுதல் மாநகர ஆணையர் பிறபித்த உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரினார்.

வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மாநகர காவல்துறை ஆணையர் பதவியில் இல்லாதபோது, கூடுதல் ஆணையருக்கு முழு அதிகாரம் உள்ளதாக வாதாடினார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிப்பதற்கு, மாநகர காவல்துறை ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டினர். எனவே, சீமானுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் நடவடிக்கையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் விடுதலையாகிறார்.

English summary
Madras HC has today quashed the arrest of Director Seeman under NSA. Bench rejected the prosecution"s claim that Additional commissioner can slap NSA in absence of City Police commissioner. Seeman may be released today evening or by tomorrow. Seeman was arrested for his speech aginst Sri Lankan govt in Naam Tamilar meeting in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X