For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளத்தால் மண் சரிவு: தமிழக-கேரள ரயில் போக்குவரத்து பாதிப்பு

By Chakra
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையால் இரணியல்- குளித்துறை இடையே நிலச்சரிவு ஏற்பட்டு பள்ளியாடி அருகே ரயில் தண்டவாளம் மண்ணில் புதைந்துவிட்டது. இதையடுத்து நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் இரணியல்- குளித்துறைக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், 14ம் தேதி வரை, சில ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதிவாரியாகவும் ரத்து செய்யப்படுகின்றன. அதன் விவரம்:

நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு 12ம் தேதி (நாளை) செல்ல வேண்டிய சிறப்பு ரயிலும் (எண் 06304), சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 13ம் தேதி செல்ல வேண்டிய சிறப்பு ரயிலும் (எண் 06304) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருவனந்தபுரம்- நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலும் (எண்கள் 371, 372, 373, 374, 375, 376, 377) ரத்து செய்யப்படுகின்றன.
நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலும் (எண்கள் 391, 394) ரத்து செய்யப்படுகின்றன.

நாகர்கோவில்- கோட்டயம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (எண் 364), நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை- கொல்லம் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலும் (எண்கள் 727, 728) நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூர்- குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்கள் 6127, 6128) நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 6381), 14ம தேதி வரை திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 6526) 14ம் தேதி வரை திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது.

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயிலும் 11ம் தேதி (நாளை) முதல் 15ம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (எண் 6723), 14ம் தேதி வரை நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்தே இந்த ரயில், 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னை புறப்பட்டுச் செல்லும்.

மங்களூர்- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்கள் 6605, 6606), திருவனந்தபுரம்- நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. ஷாலிமாரில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (எண் 6335) திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படும். பின்னர், 12ம் தேதி அங்கிருந்தே ஷாலிமார் புறப்பட்டுச் செல்லும்.

அதேபோல், காந்திதாமில் இருந்து 12ம் தேதி (நாளை) நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 6335) திருவனந்தபுரத்திலேயே நிறுத்தப்படும். பின்னர், அங்கிருந்தே 14ம் தேதி காந்திதாமுக்கு புறப்பட்டு செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து 12ம் தேதி (நாளை) நள்ளிரவு 1 மணிக்கு பிலாஸ்பூர் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 2788) அதே நாள் காலை 7.30 மணிக்கு தாமதமாக புறப்பட்டுச் செல்வதுடன், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

அதேபோல், ஹாபாவில் இருந்து திருநெல்வேலிக்கு 12, 13ம் தேதிகளில் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 2998) சோரனூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக மாற்றுப் பாதையில் இரவு 7.05 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.
திருநெல்வேலியில் இருந்து ஹாபாவுக்கு 13, 14ம் தேதிகளில் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 2997) மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சோரனூர் வழியாக இயக்கப்படும். அதன் பின்னர் வழக்கமான பாதையில் செல்லும்.

கொல்லம்- மதுரை இயக்கப்படும் பயணிகள் ரயில் (எண் 728), 15ம் தேதி வரை நாகர்கோவிலில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர்- குருவாயூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், குருவாiரில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு வந்தது. இந்த ரயில் 15ம் தேதி வரை, காலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு தெற்கு ரயில் அறிவித்துள்ளது.

English summary
Heavy rains lashing south Kerala and the adjoining Kanyakumari district of Tamil Nadu disrupted train traffic in Nagarcoil-Tirunelveli-Thiruvananthapuram sections due to landslide on tracks. Kanyakumari and Trivandrum had been battered by heavy downpour bringing low-lying areas under water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X