For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேஸ்-மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம்: நீல்கேனி தலைமையில் கமிட்டி

By Shankar
Google Oneindia Tamil News

Gas Cylinder
டெல்லி: சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்கப்படும் மானியம் மக்களுக்கு நேரடியாகப் போய்ச் சேருகிறதா என்பதை ஆராயவும், மானியத்தில் மாற்றங்கள் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பரிந்துரைகள் தர, நந்தன் நீல்கேனி தலைமையில் கமிட்டி ஒன்றையும் மத்திய அரசு அமைத்துள்ளது.

ஏழை-எளிய மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதற்காக மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. 2009-10-ம் ஆண்டுக்காக, சமையல் எரிவாயுக்காக ரூ.14 ஆயிரத்து 257 கோடியும், மண்ணெண்ணெக்காக 17 ஆயிரத்து 364 கோடியும் தற்போது மானியமாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கான உரத்துக்கு ரூ.53 ஆயிரம் கோடி மானியமாக வழங்கப்பட்டது.

ஆனால், அரசு வழங்கும் இந்த மானியத்தின் பயன்கள், உண்மையிலேயே பொது மக்களுக்கு நேரடியாகப் போய் சேருவது இல்லை என்றும், கலப்படம், கள்ள மார்க்கெட் மற்றும் கசிவு காரணமாக இழப்பு ஏற்படுவது போன்ற பல்வேறு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து மானியம் வழங்கும் கொள்கையை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

தனி கமிட்டி அமைப்பு

அதைத் தொடர்ந்து, மானியம் வழங்கும் கொள்கையை சீரமைப்பதற்காக, பல்வேறு அமைச்சகங்களை உள்ளடக்கிய சிறப்பு பணி கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்து உள்ளது. இந்த கமிட்டி, மானியத்தின் பயன்கள் நேரடியாக மக்களைச் சென்று அடையும் விதத்தில் புதிய கொள்கையை உருவாக்குவது குறித்து 4 மாதங்களுக்குள் மத்திய அரசுக்கு சிபாரிசு அறிக்கையை தாக்கல் செய்யும்.

தனி நபர் சிறப்பு அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தலைவரும், 'இன்போசிஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான நந்தன் நீல்கேனி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கமிட்டியில் நிதி, உணவு, விவசாயம், பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் உரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகங்களின் செயலாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

முன்னோடி திட்டமாக...

இந்த கமிட்டியின் சிபாரிசுகளை, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சகங்கள் முன்னோடி திட்டமாக அமல்படுத்தி, அதன் முடிவுகளும் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படும். இறுதி அறிக்கையை பரிசீலித்த பின், மானிய கொள்கையை மாற்றியமைப்பது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

மத்திய நிதித்துறை அமைச்சக செய்தி குறிப்பு ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை பதுக்கி வைத்து இருக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுத்த மராட்டிய மாநில கூடுதல் ஆட்சியர் யஷ்வந்த் சோனவானே, உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 3 வாரத்தில், மண்எண்ணெய் மானியத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான கமிட்டியை மத்திய அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The government plans to provide kerosene, cooking gas and fertiliser subsidy to the poor by direct cash transfers on a pilot basis before the end of the current calendar year, 2011.For the current year, according to Budget documents, petroleum and fertiliser subsidies add up to Rs 53,000 crore. The Finance Ministry today set up a task force under Nandan Nilekani, chairman of the Unique Identification Authority of India, to evolve a method for handing out such subsidies straight to individuals, families and farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X