For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலவை தேர்தலை எதிர்த்த வழக்கு-ஏப். 4ல் இறுதி விசாரணை

Google Oneindia Tamil News

New Assembly
டெல்லிச தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கில் ஏப்ரல் 4ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேலவைக்குத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் இதை எதிர்த்து பாஜகவும், திண்டிவனம் ராமமூர்த்தியும் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்குமாறும் அது கோரியிருந்தது.

இந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது இதுகுறித்து 10 நாளில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனு தொடர்பாக 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் பாஜகவுக்கும் உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில் ஏப்ரல் 4ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசையும் ஒரு தரப்பாக ஏற்றும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

English summary
The SC has orderd for final hearing on April 4 in TN legislative council case. SC ordered to issue notices to petitioners BJP, Tindivanam Ramamurthy and TN govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X