For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி முன்னிலையில் கூண்டோடு திமுகவில் சேர்ந்த புதுவை அதிமுகவினர்

Google Oneindia Tamil News

சென்னை: புதுச்சேரி மாநில அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நேற்று மாலை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இது குறி்த்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று (13-ம் தேதி) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுகவைச் சேர்ந்த புதுவை நகர அவைத் தலைவர் செ.நடராஜன் தலைமையில் மாநில அதிமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் எஸ்.முருகசாமி உடையார், நெல்லித்தோப்பு தொகுதி துணைச் செயலாளர் ஏ.அந்தோணிசாமி, டி.ஆர்.நகர் செயலாளர் ஐ.பழனிவேல் உடையார், மாவட்ட பிரதிநிதிகள் நெல்லித்தோப்பு தொகுதி வி.ராமு, என்.ராதா அம்மாள், திருமால் நகர் செயலாளர் ஏ.தாமஸ் பாண்டியன், சக்தி நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் டி.மணி, வேல்முருகன் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆர்.குமார், பெரியார் நகர் வார்டு அவைத்தலைவர் பி.பிரகாஷ்ராஜ், சமூக சேவகர் ஜெ.ஜேம்ஸ் ஜெயகரன் உள்ளிட்ட அதிமுக கிளை நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.

அப்போது திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன், தேர்தல் உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு எம்.பி., க.பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர் என்று கூறப்படிருந்தது.

புதுவையில் என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி வைத்து அதிமுக போட்டியிடவுள்ளது. இந்த நிலையில், அந்த மாநில முக்கிய அதிமுக நிர்வாகிகள் உள்பட பலரும் திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
More than 500 Puducherry ADMK functionaries including important leaders have joined DMK last evening in front of DMK leader cum TN CM Karunanidhi in Chennai. This incident gains importance as they have left ADMK exactly a month before the Tamil Nadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X