For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

6 மாதங்களில் இரண்டாவது ஸ்ட்ரைக்கைச் சந்திக்கும் ஜிஎம்!

By Shankar
Google Oneindia Tamil News

GM
ஹலோல்: குஜராத்தின் ஹலோல் நகரில் அமைந்துள்ள ஜிஎம் நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் மீண்டும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர் தொழிலாளர்கள்.

கடந்த 6 மாதங்களில் நடக்கும் இரண்டாவது ஸ்ட்ரைக் இது. இதனால் நாளொன்றுக்கு 350 யூனிட் கார்கள் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் குதித்துள்ளனர்.

தொழிற்சாலைப் பணியாளர்களின் வேலைப் பளு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஏற்படும் உடல்ரீதியான பாதிப்புகளை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்றும், ஊதிய முரண்பாடு களையப்படவில்லை என்பதும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 85 ஆயிரம் கார்கள் உற்பத்தியாகின்றன. 6 மாதங்களுக்கு முன்பும் தொழிலாளர்கள்ம ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர். கடந்த அக்டோபரில் நடந்த இந்த ஸ்ட்ரைக் தொழிற்சாலையையே முடக்கிவிட்டது.

இப்போது நடக்கும் ஸ்ட்ரைக்கில் மொத்தமுள்ள 900 ஊழியர்களில் பாதிப்பேர் பங்கேற்றுள்ளனர்.

English summary
For the second time in less than six months, 900 workers at General Motors’ facility in Halol, Gujarat, went on an indefinite strike, causing production loss of 350 cars. The workers went on strike while the second shift was in progress on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X