For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முரசு சின்னத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மனு

Google Oneindia Tamil News

மதுரை: முரசு சின்னத்தை தேமுதிகவுக்கு ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் திருப்பூர் தொழிலதிபர் முரளிமோகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த முரளிமோகன் ஏற்கனவே முரசு சின்னத்தை தேமுதிகவுக்கு ஒதுக்கக் கூடாது என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் திடீரென தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று முரளி மோகன் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், முரசு சின்னத்தை தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளதற்கு இடைக்கால தடை வேண்டும். தே.மு.தி.க.,வையும் வழக்கில் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முரளி மோகன்.

English summary
Tirupur industrialist Murali Mohan has urged Madurai HC bench to stay Murasu symbol for DMDK. He has said in his petition that, EC has allocated the symbol despite the case in HC. So HC bench should stay the symbol, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X