அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... நான்காவது நாளை எட்டியது!

ஜந்தர்மந்தரில் நடக்கும் அன்னா ஹஸாரேவின் இந்த சாகும் வரை உண்ணாவிரதம் இன்ரு 4-வது நாளை எட்டியுள்ளதால், மக்கள் பெரும் கவலையுடன் அவரது நிலையைக் கவனிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் அண்ணா ஹஸாரே. காந்தியவாதி. சமுக இணைய தளங்களிலும் நாடு முழுவதும் இருந்து தங்கள் ஆதரவை பதிவு செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் அவரது இந்த முயற்சியில் தங்களையும் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.
அதிலும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் காரணமாக ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ந்துபோய் இருக்கும் இந்த தருணத்தில், ஹசாரே சரியான சமயத்தில் முன்வைத்துள்ளார் என்று கட்சிகளுக்கு அப்பால் நின்று குரல்கள் வரத் தொடங்கியுள்ளன.
இந்தநாள் வரை மகாராஷ்ட்ரா ஊழல் அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டி வந்த அண்ணா ஹஸாரே, தற்போது டெல்லியில் மையம் கொண்டிருப்பதை பார்த்து மத்திய அரசு மிரண்டு போய் உள்ளது.
இதனை தொடர்ந்து சோனியா காந்தி அண்ணா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கூறியுள்ளார். விரைவில் அதற்க்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கும் அமைச்சரவைக் கூட்டம் கூட்டி, ஹஸாரேயின் உண்ணாவிரதம் குறித்து விவாதித்தார்.
ஹஸாரோவை தலைவராக்க முடியாது...
அவரது பிரதிநிதிகளாக சுவாமி அக்னிவேஷ், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் மத்திய அமைச்சர் கபில் சிபிலை புதன்கிழமை நள்ளிரவு இரண்டு முறை சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக உருவாக்கப்படும் கூட்டுக் குழுவில் அரசு தரப்பு, சமூக அமைப்புகள் ஆகியன சார்பில் சரிசமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பினர் ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் அந்த குழுவுக்கு ஹஸாரேயை தலைவராக நியமிக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் ஆலோசனை நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், கூட்டுக் குழு அமைப்பது பற்றி அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும் என்றார். இந்த நிலையில் இந்த குழுவுக்கு பிரதமர் அல்லது மத்திய நிதி அமைச்சர் தலைவராக நியமிக்கப்படக்கூடும் என அரசு தரப்பு தெரிவித்ததாக விஷயமறிந்த வட்டாரங்கள் கூறின.
தொடர் உண்ணாவிரதம் குறித்து ஹஸாரே செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
என்னால் நிச்சயம் ஒருவாரம் நலமுடன் இருக்க முடியும். எனது உடல்நிலை குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம். சிறிதளவு மட்டுமே பலவீனமாக உணர்கிறேன். 1.5 கிலோ எடை குறைந்துவிட்டது. கடவுள் என்னுடன் இருக்கிறார். அவர் காப்பாற்றுவார்.
மிரட்டல்கள் இருந்தாலும் உண்மையை ஒருபோதும் கைவிடக்கூடாது. 12 நீதிமன்ற வழக்குகளை நான் சந்தித்திருக்கிறேன், எனக்காக பணம் வாங்காமல் வாதாடும் வழக்கறிஞர்கள் உள்ளனர். உண்மையை ஒருபோதும் நாம் கைவிடக்கூடாது.
காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொள்வது ஒரு தவறான பாதை எனக் கூறியுள்ளார்.
மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் பிறந்திருப்பார் என நான் நினைக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் கடைசி போக்கிடமாக பயன்படுத்தப்படுகிறது.
முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர்தான் இந்த கூட்டுக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்படவேண்டும். கூட்டுக்குழுவுக்கு தலைவராக இருக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி கூட்டுக் குழு அமையும்பட்சத்தில் அதில் உறுப்பினராக இருக்க விரும்புகிறேன்.
லோக்பால் மசோதாவை திருத்தியமைப்பதற்காக அமைக்கப்படும் எந்த குழுவிலும் தான் இடம் பெறவேண்டுமானால், அந்த குழுவில் சோனியா காந்தியும் உறுப்பினராக இடம் பெறவேண்டும்," என்றார் ஹஸாரே.
இதற்கிடையே, லோக்பால் கமிட்டி தலைவராக கர்நாடக லோகாயுத சந்தோஷ் ஹெக்டே மற்றும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் வர்மா ஆகியோர் இருக்கலாம் என்ற ஹஸாரேவின் ஆலோசனையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications