For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜேபிசி முன்பு அமலாக்கப் பிரிவு இயக்குநர் இன்று விளக்கமளிக்கிறார்

Google Oneindia Tamil News

டெல்லி: அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் அருண் மாத்தூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் இன்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கின்றனர்.

நேற்று சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங் நேரில் ஆஜராகி விளக்கமளித்த நிலையில் இன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவின் தலைமை இயக்குநர் இன்று விளக்கமளிக்கவுள்ளார்.

அவருடன் வருவாய் மற்றும் நிதித்துறை அதிகாரிகளும் ஜேபிசி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கின்றனர்.

வழக்கு விவரங்கள், விசாரணை நிலவரம், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் உள்ளிட்டவை குறித்து இவர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.

ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது பெமா சட்டத்தின் கீழ் பல்வேறு வழக்குகளை அமலாக்கப் பிரிவு தொடர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் கிட்டத்தட்ட ரூ. 4300 கோடி அளவுககு நிதி மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இவை ஸ்வான், லூப், எஸ்டெல் ஆகியவை ஆகும்.

இன்றைய விசாரணையின்போது டிராய் அமைப்பின் தலைவர் ஜே.எஸ்.சர்மாவும் ஆஐராகவுள்ளார்.

English summary
Chief of Enforcement Directorate Arun Mathur and officials of the Finance Ministry will brief the Joint Parliamentary Committee on the ongoing investigations into the 2G scam today. Mathur, along with other senior officials of the Directorate and representatives of the Department of Revenue in the Finance Ministry, will brief the JPC separately about the probe carried out in the spectrum scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X