For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிட்-டே கிரைம் நிருபர் கொலை வழக்கு-சோட்டா ஷகீல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

By Chakra
Google Oneindia Tamil News

J Day
மும்பை: மும்பையின் பிரபல மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் ரிப்போர்டர் ஜே.டே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அண்டர்வோர்ல்ட் தாதா சோட்டா ஷகீல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாவூத் இப்ராகிம் உள்பட பல தாதாக்களின் கூலிப் படைகளின் செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் டே. சமீபத்தில் சந்தனக் கட்டை கடத்தல்
மற்றும் டீசல்-பெட்ரோல் கலப்படத்தில் ஈடுபட்டு வரும் சோட்டா ஷகீல் கும்பலின் செயல்பாடுகள் குறித்து இவர் மிட்-டே பத்திரிக்கையில் எழுதி வந்தார்.

இதையடுத்து இவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் இவரை விலைக்கு வாங்கவும் அந்தக் கும்பல் முயன்றது. ஆனால், எதற்கு பணியாமல் தொடர்ந்து இந்தக் கும்பலின் அட்டூழியங்களை எழுதி வந்த டேவை இந்தக் கும்பல் கடந்த சனிக்கிழமை பட்டப் பகலில் சுட்டுக் கொன்றது.

இந்தக் கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தக் கோரிக்கையை மாநில அரசு ஏற்க மறுத்துவிட்டது. இந் நிலையில் இந்தக் கொலை தொடர்பாக சோட்டா ஷகீல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் மும்பையிலும் இருவர் புனேவிலும் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கொலை வழக்கில் மேலும் பலர் கைதாக இருப்பதாக முதல்வர் பிரிதிவிராஜ் செளஹான் தெரிவித்துள்ளார்.

English summary
Four Chotta Shakeel gang members are arrsted in the murder of senior journalist Jyotirmoy Dey today.
 Dey, special investigation editor of daily Mid Day, was shot dead on June 11 by four motorcycle-borne assailants in suburban Powai area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X