For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்?

By Chakra
Google Oneindia Tamil News

Tamilnadu Map
சென்னை: தமிழ்கத்தில் மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அதற்கு முன்பாகவே இந்த அமைப்புகளுக்கு தேர்தலை முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 3ம் நிலை நகராட்சிகள் 50, பேரூராட்சிகள் 561, 29 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,618 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு பழைய வார்டுகள் அடிப்படையில் 155 வார்டுகளும், விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி எல்லை அடிப்படையில் 200 வார்டுகளும் உள்ளன. இதனால் 155 வார்டுகள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா அல்லது 200 வார்டுகள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான முடிவை தமிழக
அரசு தான் எடுக்க வேண்டும்.

200 வார்டுகள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், அதற்கான சட்டத் திருத்தம் சட்டசபையில் கொண்டு வரப்பட வேண்டும்.
அடுத்த மாதம் கூடும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.

தேர்தல் உரிய நேரத்தில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதால் இதற்கான அட்டவணை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர் கிறிசோநாயகம், நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் உதயசந்திரன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், பேரூராட்சி இணை இயக்குனர் ராஜன் துரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

English summary
Tamil Nadu State election commission is planning to conduct local body elections in October. The meeting on this took place yesterday in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X