For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செத்தது சென்னை-நாளை முதல் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் பவர் கட்

Google Oneindia Tamil News

Power
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை முதல் பெரும் மின் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது. இதை சமாளிக்கும் வகையில், புதிய மின் தடை முறையை மின்வாரியம் அமல்படுத்துகிறது.

தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை மக்களை பாடாய்ப்படுத்தி வருகிறது. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை. மின் தடையும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. பற்றாக்குறையும் தீரவில்லை.

இந்த நிலையில் வட சென்னை அமையவுள்ள புதிய மின் நிலையப் பணிகள் நாளை தொடங்கவுள்ளது. இதையடுத்து நாளை முதல் வருகிற 30ம் தேதி வரை சென்னை சுழற்சி முறையில் மின் தடை அமலாகவுள்ளது.

அதாவது நாளை முதல் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மின் தடை அமல்படுத்தப்படும். வட சென்னை மின் நிலையப் பணிகளால் ஏற்படும் மின் உற்பத்தி நிறுத்தத்தால் ஏற்படும் மின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இந்த புதிய மின் தடை அமல்படுத்தப்படவுள்ளது.

இதனால் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரத்திற்கு மின்சாரம் இருக்காது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இந்த சுழற்சி முறை மின்தடை நாளை முதல் அமலாகிறது.

இதன் மூலம், ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளது என்பதால் சென்னை வாசிகள் பெரும் கலக்கமடைந்துள்ளனர்.

English summary
TNEB to implement new power cut for Chennai from tomorrow. This power cut will last till June 30. According to the TNEB statement, Chennai and its suburbs will face 6 hour power cut daily. Power cut will be implemented for one hour for every 4 hour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X