For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மரண தண்டனையை எதிர்த்து தொடர் முழக்கப் போராட்டம்- வைகோ அழைப்பு

Google Oneindia Tamil News

Murugan, Santhan and Perarivalan
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூ்வருக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மூன்று இளம் தமிழர்களின் உயிரைக் காக்க, குற்றமற்ற நிரபராதிகளை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, பதறித் துடிக்கும் ஆயிரமாயிரம் இளந்தலைமுறையினரும், மனித உரிமைக்குப் போராடும் தன்னலம் அற்ற சகோதரர்களும், சகோதரிகளும், ஆகஸ்ட் 18 காலை ஆறு மணிக்கு, தலைநகர் சென்னையில் இருந்து இருசக்கர வாகனங்களில் புறப்பட்டு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக, வேலூர் வரையிலும் பயணத்தை நடத்துகின்றனர்.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில், மனித உரிமை காக்கும் இப்பயணத்தை, கட்சி, சாதி,மத எல்லைகளைக் கடந்து, துன்பத் தணலில் துடிக்கும் தமிழ் இனத்தின் ஆவேச வெளிப்பாடாகச் செய்கிறார்கள்.

நம் அன்புநிறைச் சகோதர்கள், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர், ஜனநாயகத்தின் மென்னியை முறித்த தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்ப்டடு, போலீசாரின் கொடிய சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தால் தண்டிக்கப்பட்டனர்.

இருபது ஆண்டுகள் சிறைக் கொட்டடியில், துன்ப முட்களில் வாடி வதங்கி வாழ்வின் அற்புதமான வாலிபப் பருவத்தை, கண்ணீரோடே கடந்து விட்டனர். மரணக் கொட்டடியிலேயே 13ஆண்டுகள் போய்விட்டன.

குற்றமற்ற நிரபராதி, தன் தலைமீது மரணம் எனும் கொடுவாள், தூக்குத்தண்டனை வடிவில் தொங்கிக் கொண்டு இருக்க, ஒவ்வொரு நாளும் அனுபவித்து உள்ள மனத்துன்பம் மரணத்தைவிடக் கொடுமையானது.

மரண தண்டனை விதிக்கப்பட்டநான்கு பேர்களுள், நளினி,தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார். அதே மனிதாபிமான அளவுகோல்தானே இந்த மூவருக்கும் பொருந்தும்?

தமிழ்நாட்டின் கடந்த17ஆண்டுகளாக,எந்தச் சிறையிலும் எவரும் தூக்கில் இடப்படவில்லை. எனவே, இம்மூன்று நிரபராதி தமிழர்களின் உயிரை அழிக்காதீர்கள்; அவர்களைத் தூக்கில் போடாதீர்கள்.

மத்திய அரசு நினைத்தால்,எந்தநேரத்திலும் இம்மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியும். எனவே, மூவர் உயிரைக் காக்கவும், நெஞ்சைப் பிளக்கும் வேதனையைத் துடைக்கவும், தக்க நடவடிக்கை எடுத்திட, தமிழக அரசை வேண்டுகிறோம்.

அறவழியில், அமைதி வழியில், மனக்குமுறலோடு மரண தண்டனையைத் தடுக்கப் பயணிக்கும் 4000 இளம் தமிழரின் குறிக்கோள் வெற்றி பெறட்டும். அவர்கள் பயணிக்கும் பாதையில், அவர்களின் கோரிக்கைக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவு திரளட்டும்.

உயிர் காக்க நடைபெறும் இந்த எழுச்சிப் பயணத்தில், தமிழ் இன உணர்வு கொண்டோரும், மனித உரிமை காப்போரும் பங்கு ஏற்க வேண்டுகிறேன். 18 ஆம் தேதி வியாழக்கிழமை, பொழுது விடியும் நேரத்தில், சென்னையில் இருந்து புறப்படுகிறார்கள். துன்ப இருளில் தவிக்கும் மூன்று உன்னதமான உயிர்களுக்கும் விடுதலைப் பொழுது விடியட்டும்.

அதுபோலவே, ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை, காலை 10 மணிக்கு பாரிமுனையில், மூன்று இளந்தமிழரின் உயிரைக் காக்க, மரண தண்டனையைத் தடுக்க, கட்சி எல்லைகளைக் கடந்து, மனிதநேயப் பற்றாளர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் நுhறாயிரமாகத் திரண்டு, தொடர் முழக்க அறப்போராட்டம் நடத்திட உள்ளனர்.

மரணப் படுகுழியில் லட்சக்கணக்காக ஈழத்தமிழர்கள்துடிதுடிக்கக் கொல்லப்பட்டு, அதனைத் தடுக்க, தங்கள் சாவின் மூலமாகவாவது வழி பிறக்காதா? என்று, முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர், தங்கள் தேகத்துக்கு நெருப்பு மூட்டிக் கருகிச் சாம்பலானார்கள்.

தமிழர் மனங்கள் உடைந்து நொறுங்கி, அழுது புலம்பும் இந்த வேளையில், குற்றமற்ற மூன்று தமிழ் வாலிபர்கள் கொல்லப்படுவதோ? தூக்கில் இடப்படுவதோ? இதை நம் வாழ்நாளில்காண்பதோ? என்று வேதனைத் தீயில் துடிதுடிக்கும் தமிழ் நெஞ்சங்களே, மனித உரிமைக் காப்பாளர்களே, 20 ஆம் தேதி, தலைநகர் சென்னை பாரிமுனை அழைக்கிறது; தவறாது வாருங்கள். மரண தண்டனையைத் தடுக்க வாருங்கள். மாணவக் கண்மணிகளே வாருங்கள்; தொழிலாளத் தோழர்களே வாருங்கள்.

பகுத்தறிவுப் பகலவனின் வழிவந்த குடும்பத்துப் பிள்ளை பேரறிவாளனின் உயிர் தூக்குக் கயிற்றிலா? கதறித் துடிக்கும் அவனது அருமைத் தாயார் அற்புதம் அம்மாளின் துன்ப ஓலமும், கதறலும், பதைபதைக்கச் செய்கிறதே?நம் பிள்ளைகள் மூவரின் உயிர் காக்க வாரீர்! தூக்குத் தண்டனையைத் தடுத்து நிறுத்த, மத்திய அரசு முன்வரட்டும்; மாநில அரசு அந்நிலையை உருவாக்கட்டும்! என்ற ஆவேச முழக்கம் எழுப்பிட வாரீர் என இருகரம் கூப்பி வேண்டுகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK Chief Vaiko has called for a Thodar Muzhakka porattm against the death sentence to Rajiv Killers Santhan, Murugan and Perarivalan. The protest will be held in Chennai Parrys' corner on August 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X