For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்னா ஹசாரே ஆதரவாளர் தீக்குளித்துத் தற்கொலை

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

பிகாரைச் சேர்ந்த தினேஷ் குமார் யாதவ், டெல்லி ராஜ்காட்டில் 80 சதவீத தீக்காயங்களுடன் கிடந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவருக்கு மனைவி, 5 குழந்தைகள், மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். டெல்லியில் வாட்ச் மெக்கானிக்காக தினேஷ் வேலைபார்த்து வந்தார்.

ராம்லீலா மைதானத்தில் போலீசார்-ஹசாரே ஆதரவாளர்கள் மோதல்:

இந் நிலையில் ஹசாரே கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மது அருந்திவிட்டு வந்ததாகக் கூறப்படும் இளைஞர்கள் அங்கு பாதுகாப்புப் பணிக்காக நின்றிருந்த போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

அதிகாலை 3 மணியளவில் ராம்லீலா மைதானத்தின் விஐபி நுழைவாயில் கதவுகளை அந்த இளைஞர்கள் திறக்க முயற்சித்தனர். போலீசார் அவர்களை உள்ளே விட மறுக்கவே, அவர்களைத் தாக்கினர்.

இதையடுத்து விரைந்து வந்த கூடுதல் போலீசார் அவர்களை ஒடுக்கி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 14 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந் நிலையில் அந்த வாலிபர்கள் அன்னாவின் ஆதரவாளர்கள் இல்லை என்றும், கலாட்டா செய்ய வந்த கும்பல் என்றும், ஆனால், அவர்களை ஹசாரே ஆதரவாளர்கள் என்று கூறி போலீசார் திசை திருப்ப முயல்வதாக அன்னாவின் குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளார்.

ஹசாரே கைது விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை:

இதற்கிடையே ஆகஸ்ட் 16ம் தேதி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஹசாரே கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம்சிங் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஹசாரேவின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கபில்சிபல் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று அவர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A 32-year-old from Patna allegedly immolated himself in support of the Jan Lokpal Bill in the Capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X